அர்ஷ்தீப் சிங்கின் பாவம் இந்தியா டீமுக்கு சுற்றியே தீரும். இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் முந்த நாள்(ஞாயிறன்று-04) தோற்ற போது ரோஹித் ஷர்மா சிங்கினை வச்சி திட்டியிருக்கிறார். கோஹ்லி தான் கொஞ்சம் சமாதானப்படுத்தி அந்த விடலைப் பையனை தூங்க வைத்திருக்கின்றார்.
மறுபக்கம் சங்கிகள் கூடி அர்ஷ்தீப்பினை சமூக ஊடகங்களில் பொதுவெளி சித்ரவதை செய்தனர். சிங்கின் விக்கிப்பீடியா(Wikipedia) சென்று அவர் “காலீஸ்தான்” அணிக்கு விளையாடியதாய் Edit செய்து,அபாண்டம் பரப்பினர்.

காலீஸ்தான் என்பது சீக்கியர்கள் எப்போதோ கேட்ட தனிநாட்டு கோரிக்கையாகும். சீக்கியர்கள் இப்போது அந்த எண்ணமும், நோக்கமும் இல்லாமல் அக்கோரிக்கையை கை விட்டு பல வருடங்கள் கடந்தும், மதவாதம் பிடித்தவர்கள் சீக்கியர்களை சீண்டி இருப்பது இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அர்ஷ்- க்கு இந்தியா டீமின் பல முன்னணி வீரர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். வழக்கம் போல் சச்சின் மௌனம் காத்தார். கடந்த வருடத்தில் முஹம்மத் ஷமி மீது சங்கிகள் இதே மதவாத முத்திரை குத்தி அவதூறு பரப்பியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
பாகிஸ்தானின் வாசீம் அக்ரம் போலவே இந்தியாவின் ‘சொலிட் யோக்கர்களின்’ சொந்தக்காரன் அர்ஷ்தீப் சிங் என்பதை அவருடைய பந்து வீச்சினை தொடர்ந்து பார்க்கின்றவர்கள் புரிந்து கொள்வர்.

இன்றும் இலங்கையின் வெற்றியினை சற்று தாமதப்படுத்தியதும் அதே அர்ஷ்தீப் சிங் தான். அவரது துல்லியமான யோக்கர் பந்துகள் எந்தவொரு அனுபவ துடுப்பாட்டக்காரனையும் நிலைகுலையச் செய்து விடும்.
அரசியல் போலவே விளையாட்டும் மதம் அல்ல. Sprit Of Game. ஒரு ஆட்டத்தின் உச்ச இன்பம் மைதான உணர்வுகளின் சரவெடிக்கு சமமானது.
மைதானத்திற்கு வெளியே அதனை அள்ளி எறிந்து விட்டு கனவான்களாய் பயணப்படுதலே அனைவருக்கும் ஆரோக்கியம்.
எஸ்.ஜனூஸ்
07.09.2022







