அறிமுக போட்டியிலேயே அசத்திய புதுமுகம், அசால்டாக தூக்கி தடை விதித்த கிரிக்கட் சபை ,காரணம் தெரியுமா ?

இங்கிலாந்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லோட்ஸ் மைதானத்தில் நேற்று நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் இரண்டு அணிகளும் ஆதிக்கம் மிகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதியில் வெற்றி தோல்வியற்ற போட்டியாக முடிவுக்குக் கொண்டுவந்தன.

இங்கிலாந்தின் ஏராளமான வீரர்கள் சிரேஷ்ட வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்ற வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்காத நிலையில், இளம் அணியாக இங்கிலாந்து இந்த போட்டி தொடரில் முகம் கொடுக்கிறது .

இங்கிலாந்து சார்பில் அறிமுகமான ரோபின்சன் நியூசிலாந்து சார்பில் அறிமுகமான டெவோன் கொன்வே ஆகிய இரண்டு வீரர்களும் தங்களுடைய வரவை நிரூபித்துக் காட்டினர்.

அதிலும் சசெக்ஸ்  பிராந்தியத்தின் 27 வயதான ஒல்லி ரோபின்சன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தது மாத்திரமல்லாமல், இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்தின் 6 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை இவரே தனதாக்கினார்.

இப்படி அசத்திய ரோபின்சன், சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் விளையாட முடியாத வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தடை விதித்திருக்கிறமைதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

2012- 2013 பருவ காலத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு இனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் என கருத்துப்பட டுவிட்டரில் பகிர்ந்தமை மற்றும் ஆசியநாட்டு பெண்கள் தொடர்பில் பாலியல்சார் கருத்துக்கள் ஆகியனவே  இப்போது பேசப்பட ஆரம்பித்தது.

இங்கிலாந்து, நியூசிலாந்து வீரர்கள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அணிந்த சீருடையும் அதன் மீதான அக்கறை வெளிப்படுத்தல்களுமே இந்த பிரச்சனை கிளறப்பட காரணமானது.

 இதன் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முடியும் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுக்க முடியாத அளவிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தடை விதித்திருக்கிறது.

அறிமுக போட்டியிலேயே அசத்தலாக திறமையை வெளிப்படுத்திய ஒல்லி ரொபின்சனுக்கு இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத தடை வந்திருக்கின்றமை வேதனைக்குரியதே. இது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் கருத்து தெரிவிக்கின்றபோது, இது மைதானத்திற்கு வெளியில் இடம்பெற்று ஒரு நிகழ்வு, இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை, ரொபின்சன் ஒரு திறமையான வீரர் எனும் கருத்தை அவர் முன்வைத்தமையும் கவனிக்கத்தக்கது.