அவுஸ்திரேலிய, இந்திய தொடர்களுக்கான இலங்கை வீரர்களின் பங்கேற்பு தொடர்பான தகவல்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் கொரோனா தாக்கம் மற்றும் உபாதைகளால் அடுத்துவரவுள்ள இந்திய தொடரையும் தவறிவிடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரமேஷ் மெண்டிஸ்
பயிற்சியின் போது பேட்டிங் செய்யும் போது ரமேஷ் மெண்டிஸின் வலது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் இவரது பங்கேற்பு சந்தேகமாகியுள்ளதாகவும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
நுவன் துஷாரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பந்துவீசும்போது நுவான் துஷாராவுக்கு இடது பக்க வலி ஏற்பட்டது.
துஷாரா புனர்வாழ்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளார், மேலும் அவுஸ்திரேலிய தொடரின் மீதமான போட்டிகளை இழக்கவுள்ளதோடு அடுத்துவரும் இந்திய தொடரையும் தவறவிடவுள்ளார்.
வணிந்து ஹசரங்க.
அவுஸ்திரேலிய அணியுடனான மீதமான 2 போட்டிகளிலும் கொரோனா தாக்கம் காரணமாக விளையாட முடியாவிட்டாலும், இந்திய தொடரில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.