அவுஸ்ரேலியாவின் அடுத்த அணித்தலைவர் யார் -வெளியாகிய தகவல்…!

அவுஸ்ரேலிய அணியின் தற்போதைய தலைவராக இருக்கும் டிம் பெயின் அண்மைக்காலமாக தலைமைத்துவத்தில் சொதப்பி வரும் நிலையில் விரைவில் தலைமைத்துவ மாற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாக அறிய வருகிறது.

அண்மையில் இதுதொடர்பில் குறிப்பிட்டிருந்த டீம் பெயின், தான் பதவி விலகுவதாக இருந்தால் மீண்டும் தலைமைத்துவத்தை தன் நண்பரான ஸ்மித்திடம் ஒப்படைத்து விட்டு விலகுவதே சிறந்தது எனும் கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் முன்னாள் அவுஸ்ரேலிய அணித்தலைவரான இயன் சாப்பல் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார் .

 

 

மீண்டும் அவுஸ்ரேலியாவின் தலைமைத்துவத்தை ஸ்மித்திடம் கொடுப்பதை காட்டிலும் உதவி அணித் தலைவராக செயற்படும் பட் கம்மின்ஸ்சிடம் அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைத்துவத்தை ஒப்படைப்பது பொருத்தமானது எனும் கருத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார் .

 

 தலைமைத்துவ மாற்றம் ஒன்று அவுஸ்ரேலிய கிரிக்கெட்டில் வருமாக இருந்தால் அதற்கு யார் பொருத்தமானவர் என்பதை பொறுத்து நாங்கள் தெரிந்து கொள்ளலாம்.