அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் அன்ட்ரூ சைமண்ட்ஸ் தனது 46 வயதில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சைமண்ட்ஸ் இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக குயின்ஸ்லாந்து காவல்துறை அறிக்கை கூறுகிறது.
சைமண்ட்ஸ் ஹெர்வி ரேஞ்ச் சாலையில் ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலையை விட்டு உருண்டு கவிழ்ந்தது என்று போலீசார் கூறுகின்றனர்.
துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர் ஆனால் காரில் இருந்த ஒரே நபரான முன்னாள் ஆஸ்திரேலிய ரசிகர்களின் விருப்பமான சைமன்ட்ஸை உயிர்ப்பிக்க முடியவில்லை எனவும் அறியவருகின்றது.
அவர் மட்டும் தனியாக காரில் சென்றுள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
You Tube Link ?
46 வயதாகும் சைமண்ட்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 1999 – 2007ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் உலகை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியபோது அந்த அணியின் முக்கிய தூணாக சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்தார் .
வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மூலம் கவனம் ஈர்க்கப்பட்ட அவர், ஓய்வுக்கு பின் ஃபாக்ஸ் கிரிக்கெட்டின் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று பணியாற்றி வந்தார்.
அண்மையில் அவுஸ்ரேலியாவின் பிரபல சுழல் பந்து வீச்சாளர் வோர்ன் உயிரிழந்த சோகத்திலிருந்து ரசிகர்கள் மீள்வதற்கிடையில் இன்னுமொரு சுகம் நேர்ந்துள்ளது.