நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா தங்கள் நாட்டில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியை செப்டம்பர் 1, வியாழன் அன்று அறிவித்தது.
2021 உலகக் கோப்பை வெற்றியாளர்கள், லெக் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சனுக்குப் பதிலாக அதிரடி வீரர் டிம் டேவிட்டைக் கொண்டுவரும் அதிரடித் தீர்மானத்துடன் கடந்தவருட அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே செய்து அணியை தேர்வு செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் பிறந்த டேவிட், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக கிரிக்கெட்டில் உலகின் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக நம்பிக்கையை உருவாக்கி வருகிறார்.
மைதானம் முழுவதும் ஷாட்களை விளையாடும் டேவிட்டின் தனித்துவமான திறன் அவரை உலக கிரிக்கெட்டில் மிகவும் விரும்பப்படும் ஒருவராக ஆக்கியுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக்கில், டேவிட் ஐ.பி.எல் தொடரின் மிக வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.8.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.
“கடந்த உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலைமைகளின் அடிப்படையில் மிட்செல் ஸ்வெப்சன் தேர்வானார், ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய மைதானங்களுடன் நல்ல பேட்டிங் நிலைமைகளுடன் ஒப்பிடும்போது நாங்கள் டிம் டேவிட்டை தேர்வு செய்தோம் என தலைமை தேர்வாளர் ஜோர்ஜ் பெய்லி கூறினார்.
டேவிட் ஏற்கனவே சிங்கப்பூருக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார், மேலும் ஆஸ்திரேலிய தரப்பில் பேசுபொருளாக இருந்து வருகிறார். டேவிட்டை அணியில் சேர்ப்பது சமீப காலங்களில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் பரிந்துரைக்கப்பட்டது, குறிப்பாக ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங்.
அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் உலகப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளின் ஒன்றாக இதே அணியே இந்தியாவுக்குப் பயணிக்கவுள்ளது.
அணி விபரம் ?
ஆரோன் பின்ச் (தலைவர்), பாட் கம்மின்ஸ் (உதவி தலைவர்), ஆஷ்டன் அகர், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா
எமது YouTube தளத்துக்கு ?