அவுஸ்ரேலியாவை அவர்கள் மண்ணிலேயே மண்கௌவ செய்தது சிம்பாப்வே அணி…!

அவுஸ்ரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த சிம்பாப்வே அணிக்கும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த அவுஸ்ரேலியா 2-0 என முன்னதாகவே தொடரை கைப்பற்றியிருந்தது, ஒரு போட்டி மீதம் இருந்த நிலையில் இன்று ஆரம்பமான போட்டியில் சிம்பாப்வே மிரட்டலான வெற்றியை ஈட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 141 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர் 96 ஓட்டங்களை விளாசினார், மற்றைய வீரர்கள் எல்லோரும் விரைவாகவே ஆட்டமிழந்தனர்.

ரியன் பேர்லின் பந்துவீச்சில் அவுஸ்ரேலியாவின் பின்வரிசை சுக்குநூறாகிப்போனது, ரியன் பேர்ல் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசி 5 விக்கெட்டுகளை சரித்தார்.

142 இலகுவான இலக்குடன் ஆடிய சிம்பாப்வே கடுமையான நெருக்கடியை சந்தித்து 7 விக்கெட்டுகளை இழந்து போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.

அவுஸ்ரேலியாவை அவர்கள் மண்ணிலேயே வைத்து வீழ்த்தி  சிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் முதல் சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் அமைந்தது.

சிம்பாப்வே அணி அண்மையில் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது,

இந்தியாவுடனான போட்டியிலும் கடுமையான பலப்பரீட்சை நடத்தி இருந்த சிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்களுடைய மீள் எழுச்சியை சிறப்பாக நிரூபித்திருக்கிறது.

 

எமது YouTube தளத்துக்கு செல்ல ?