ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வலுவான அணியை ஜிம்பாப்வே அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ப்ளெஸிங் முசரபானி, ஜிம்பாப்வேயின் ஆஸி சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் முறையே ஆகஸ்ட் 28, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் டவுன்ஸ்வில்லியில் உள்ள டோனி அயர்லாந்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
2003-04க்குப் பிறகு ஜிம்பாப்வேயின் முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இதுவாகும்.
இந்தியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே தொடருக்குச் செல்கிறது.
அணி விபரம் ?
ரியான் பர்ல், ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), பிராட் எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மாடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, டோனி முனியோங்கா, பிளெஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நாகராவா, விக்டர் நாகராவா, விக்டர் ன்யாருசா, விக்டர் ன்யாருசாம்ஸ்.