அவுஸ்ரேலியாவை சந்திக்கவுள்எ நியூசிலாந்து அணி அறிவிப்பு…!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சேப்பல்-ஹாட்லி ஒருநாள் தொடரில் நியூசிலாந்தை மீண்டும் கேன் வில்லியம்சன் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) உறுதி செய்துள்ளது.

காயம் காரணமாக கடந்த வாரம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளைத் தவறவிட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வில்லியம்சன் பங்கேற்பதில் சந்தேகம் இருந்தது.

இருப்பினும், 32 வயதான அவர் குணமடைந்து, செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 11 வரை கெய்ர்ன்ஸில் நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றியும் விலா எலும்பில் இருந்து குணமடைந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி அணியில் இடம்பெறவில்லை, காயம் காரணமாக கைல் ஜேமிசன், ஆடம் மில்னே ஆகியோரும் வாய்ப்பு பெறவில்லை.

 அணி விபரம் ?

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், மாட் ஹென்றி, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர்,