அவுஸ்ரேலிய A அணியை அதிரடியாக வீழ்த்தியது இலங்கை A அணி..!

இலங்கை ‘A’ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

ஆஸ்திரேலியா A முதலில் ஆடி 48.4 ஓவர்கள் நிறைவில் 312 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

டிராவிஸ் ஹெட் 110, ஆரோன் ஹார்டி 58 ஓட்டங்களைக் குவிக்க பந்துவீச்சில் இலங்கை A அணி சார்பில் பிரமோத் மதுஷன் 4/50 ,நிசல தாரக 2/48
சஹான் ஆராச்சிகே 2/58 ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலளித்த இலங்கை A அணி 48.5 ஓவர்களில் 315 ஓட்டங்களை 6 விக்கெட் இழப்புக்கு பெற்று வெற்றி பெற்றது.
நிரோஷன் டிக்வெல்ல 83, அஷேன் பண்டார 73*, துனித் வெல்லலாலகே 17*, சஹான் ஆராச்சிகே 31, ஓஷத பெர்னாண்டோ 24, கமிந்து மெண்டிஸ் 40, தனஞ்சய டி சில்வா 30 ஓட்டங்கள் பெற்றனர்.

இதன்மூலமாக 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமன் செய்யப்பட்டது.

#SLvAUS