ஆப்கானிஸ்தான் அணியுடனான பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா இறுதி ஓவரில் அடித்த 2 சிக்சர்கள் மூலமாக பாகிஸ்தான் மிகச் சிறந்த வெற்றியை தனதாக்கியது ?
இதன் மூலமாக ஆசியக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தின ?
இந்தப்போட்டியில் பாகிஸ்தான் அதிரடி வீர்ர் ஆசிப் அலி ஆட்டமிழந்த ஆத்திரத்தில் தன்னை சீண்டிய ஆப்கான் வீரர்ர் பரீத்தை துடுப்பாட்ட மட்டையால் அடிக்கப் பாரத்த சம்பவமும் பதிவானது .
Unfortunate and sad to see the fight between Asif Ali and Fareed Ahmed but for knowing the ugly reason/reality behind this scuffle that why our Afghan brothers/sisters hate us so much? We need honest/serious introspection!#PAKvAFG pic.twitter.com/jiNite7KXW
— Asad Ali Toor (@AsadAToor) September 7, 2022
விறுவிறுப்பான கட்டத்தில் ஆசிப் அலி ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கையில் ஆப்கானின் பந்துவீச்சாளர கோபப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபட்டார், அதன்பின்னர் ஆத்திரமடைந்த ஆசிப் அலி இந்த தகராறில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் ஆப்கான் வீரரான, முன்னாள் தலைவர் குல்பாடின் நயீப் ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் முன்வைத்திருக்கிறார்.
This is stupidity at extreme level by Asif Ali and should be ban from the rest of the tournament, any bowler has the right to celebrate but being physical is not acceptable at all. @icc @ACCMedia1 pic.twitter.com/3ledpmM3mt
— Gulbadin Naib (@GbNaib) September 7, 2022
இந்த நடவடிக்கைக்காக ஆசிப் அலிக்கு அடுத்து வருகின்ற போட்டிகளில் தடை விதிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை அவர் முன்வைத்திருக்கிறார் .
சமூக வலைத்தளங்களில் இந்த மாதிரியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் பரஸ்பரம் இரு வீரர்களும் தவறு செய்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
Cricket is a gentleman’s game.
Emotions,love,respect and brotherhood.
We respects every oppositions on the field.
Give respect take respect.??
This what we want.#PAKvAFG #AsiaCup2022
Love you all ?? pic.twitter.com/VbyaoyVsu9— Gulbadin Naib (@GbNaib) September 7, 2022
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு.
உணர்வுகள், அன்பு, மரியாதை மற்றும் சகோதரத்துவம் கொண்டது, களத்தில் உள்ள அனைத்து எதிராளர்களையும் நாங்கள் மதிக்கிறோம். மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும் இதுதான் நாம் விரும்புவது எனவும் அவர் இன்னொரு பதிவில் ரசீத் கான், ஹாரீஸ் ரவூப் ஆகியோரது நட்பையும் பாரட்டியுள்ளார்.
YouTube தளத்துக்கு செல்ல ?