ஆசியக்கிண்ண போட்டியில் ஆப்கான் ரசிகர்கள் அடாவடி -பாகிஸ்தானுடனான போட்டிக்கு பின் சம்பவம் (வீடியோ இணைப்பு )

பாகிஸ்தானுக்கு எதிரான ஆணியக்கிண்ண ஆட்டத்தில் தோல்வியடைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் ஆத்திரமடைந்ததால், பாகிஸ்தான் பார்வையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நேற்று சாரஜா மைதானத்தில் பதிவானது.

நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 இன் சூப்பர் 4 ஆட்டத்தின் நேற்றைய Nail baiting விறுவிறு போட்டியில், பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

இறுதி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் நசீம் ஷாவின் இரண்டு சிக்ஸர்கள் தோல்வியின் விளிம்பில் இருந்து பாகிஸ்தானுக்கு வெற்றியைப் பறிக்க உதவியது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இருப்பினும், தோல்விக்கு பிறகு கட்டுப்பாட்டை இழந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மைதானத்தில் நாசவேலையில் ஈடுபட்டனர்.

இதனை சோயிப் அக்தார் உள்ளிட்ட பலரும் சமூகவலைத்தளத்தில் வன்மையாக கண்டுத்துள்ளனர் ?

ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. பாகிஸ்தான் பார்வையாளர்கள் மீது ஆப்கன் தாக்குதல் நடத்தியதையும், நாற்காலிகளை வீசியதையும் வீடியோக்களில் காணலாம்.

 

முன்னதாக, போட்டியின் போது பாகிஸ்தானின் வீரர் ஆசிப் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்,

கனவான்களின் ஆட்டம் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றியையும், தோல்வியையும் ஜீரணித்துக் கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளும் மனநிலையோ இல்லாத ரசிகர்கள் இருக்கும் வரை அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதை தவிர்க்க முடியாது.

கிரிக்கெட் என்பது ஒரு போட்டி, கிரிக்கெட் என்பது விளையாட்டு, நாங்கள் விரும்பும் அணி வெற்றி பெறலாம், மாறியும் நடக்கலாம் அதற்காக எதிரணிகள் மீது வன்மத்தையும், அடிதடிகள் என்பவற்றையும் விட்டுவிட்டு கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக நேசிப்பது மட்டுமே கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?