ஆசியக்கோப்பை – இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 3 போட்டிகளுக்கு வாய்ப்பு …!

ஒன்பது மாத நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை 2022 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் முட்டிமோதவுள்ளன.

இந்தநிலையில் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் 3 முறை மோதும் சந்தர்பம் உருவாகியுள்ளது, இந்தியாவும் பாகிஸ்தானும் A பிரிவில் தகுதி பெறும் அணியுடன் இடம் பெற்றுள்ளன.

ஆகஸ்ட் 28 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை தவிர, சூப்பர் 4 களில் இரு அணிகளும் சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் சந்திக்கவாய்ப்புள்ளது.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் தகுதி பெறுவதால், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் குழுவிலிருந்து மற்ற தகுதிபெறும் அணியை தோற்கடிக்க வாய்ப்புள்ளது,

மேலும் எந்த அசம்பாவிதமும் இல்லை எனில், இரு அணிகளும் செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது,

இப்போது மற்ற சாத்தியம், அது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. தற்போதைய வடிவத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் உலகின் இரண்டு வலுவான அணிகள், மேலும் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற மேம்படுத்தும் அணிகளின் கடுமையான போட்டி இருந்தபோதிலும், ரோஹித் ஷர்மா மற்றும் பாபர் ஆசாமின் அணிகள் அவற்றை சிறப்பாகப் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த அணிகளே இறுதிப் போட்டியிலும் (செப் 11) விளையாடலாம் என எதிர்வுகூறப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை மோதலுக்குப் பிறகு இந்த ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டியையும் சேர்த்துக்கொண்டால் 3 முறை முட்டிமோத வாய்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.