இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ளது. போட்டியை இலங்கை நடத்துகிறது, இந்த ஆண்டு போட்டி உலக கிண்ணத்தை கவனத்தில்கொண்டு T20 வடிவத்தில் நடைபெறும் என்பதோடு இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் போட்டியில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. போட்டி ஆகஸ்ட் 27ம் திகதி துபாயில் நடக்கிறது.
இந்த தொடரின் இரண்டாவது போட்டி இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 28ம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது. போட்டியின் முதல் சுற்று செப்டம்பர் 2 ஆம் திகதி முடிவடைய உள்ளது.
அதன்பிறகு, நான்கு சூப்பர் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் அட்டவணை ?
ஆகஸ்ட் 27 – இலங்கை vs ஆப்கானிஸ்தான் – துபாய்
ஆகஸ்ட் 28 – இந்தியா vs பாகிஸ்தான் – துபாய்
ஆகஸ்ட் 30 -பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் – ஷார்ஜா
ஆகஸ்ட் 31 – இந்தியா vs தகுதிச் சுற்று – துபாய்
செப்டம்பர் 1 – இலங்கை vs பங்களாதேஷ் – துபாய்
செப்டம்பர் 2 – பாகிஸ்தான் vs தகுதிச் சுற்று – ஷார்ஜாவ
செப்டம்பர் 3 – B 1 மற்றும் B2 – ஷார்ஜா
செப்டம்பர் 4 – A1 மற்றும் A2 – துபாய்
செப்டம்பர் 6 – A1 மற்றும் B1 – துபாய்
செப்டம்பர் 7 – A2 மற்றும் B2 – துபாய்
செப்டம்பர் 8 – A1 மற்றும் B2 – துபாய்
செப்டம்பர் 9 – B1 மற்றும் A2 – துபாய்
செப்டம்பர் 11 – இறுதி – துபாய்
இங்கே A1 மற்றும் A2 ஆகியவை A குழுவின் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் .
A பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், B பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற அணியும் இடம்பெறும்.