ஆசியக் கிண்ணம் -தசுன் ஷானகவின் கருத்து…!

ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிக முறை இறுதிப் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை அணி, ஆசிய கிரிக்கட் மகுடம் சூடுவதற்காக இன்று (11) மாலை 7.30 க்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டியிடவுள்ளது.

இலங்கை அணிக்காக இதுவரை அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணித்தலைவர் தசுன் ஷானக, போட்டி நடத்தும் இலங்கை அணியை வழிநடத்தும் அதே வேளையில், தற்போது டி20 பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்தவுள்ளார்.

இதற்கிடையில், இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தசுன் ஷானக, “ஆசிய கிண்ணத்தை இலங்கைக்கு கொண்டு வந்து கிரிக்கெட்டின் வசந்தத்தை மீண்டும் ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

இலங்கை அணி சிறப்பாக விளையாடி கிண்ணத்தை கைப்பற்ற வாழ்த்துவோம் ?

 

 

 

 

 

 

Previous articleஹர்ஷா போக்லே தெரிவுசெய்துள்ள சிறந்த ஆசியக்கிண்ண அணி -விபரம் …!
Next articleசாம்பியனானது இலங்கை அணி …!