ஆசியக் கோப்பைக்கான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை UAE யில் நடைபெற உள்ளது.
மேலும் தகுதிச்சுற்று நாளை (20) தொடங்கவுள்ளது. இங்கு தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய அணிகளும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாகவும் தகுதி பெற்றுள்ளன.
இதேவேளை, இவ்வருட ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழமை போன்று இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு அணித்தலைவர் தசுன் ஷனகவுக்கும் உபதலைவர் பதவி சரித் அசலங்கவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி,
01. தசுன் ஷனக (கேப்டன்)
02. தனுஷ்க குணதிலக்க
03. பாத்தும் நிஸ்ஸங்க
04. குசல் மெண்டிஸ் (WK)
05. சரித் அசலங்க (vc)
06. பானுக ராஜபக்ஷ (WK)
07. அஷேன் பண்டார
08. தனஞ்சய டி சில்வா
09. வனிது ஹசரங்க
10. மகேஷ் தீக்ஷன
11. ஜெஃப்ரி வாண்டர்சே
12. பிரவீன் ஜெயவிக்ரம
13. துஷ்மந்த சமீர
14. பினுர பெர்னாண்டோ
15. சாமிக்க கருணாரத்ன
16. தில்ஷான் மதுஷங்க
17. மதீஷ பத்திரன
18. தினேஷ் சண்டிமால் (WK)
19. நுவனிந்து பெர்னாண்டோ
20. கசுன் ராஜித