ஆசியக் கோப்பையை தவறவிடும் பாகிஸ்தான் பிரபல வேகப்பந்து வீச்சாளர்- மாற்று வீரர் அறிவிப்பு..!
பாகிஸ்தான் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி, எதிர்வரும் ஆசியக் கிண்ண தொடரிலும் விளையாட முடியாத நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஷாஹீன் காயம் அடைந்தார்.
இதன்காரணத்தால் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இடம் பிடித்துள்ளார்.
ஆசியக் கோப்பையின் ஆரம்பச் சுற்றில் இந்தியா மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுடன் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
பரவலாக எதிர்பார்கப்படும் இந்திய, பாகிஸ்தான் போட்டி இம்மாதம் 28 ம் திகதி இடம்பெறவுள்ளது.