ஆசிய கோப்பை, உலக கோப்பை என்பவற்றை தவறவிடப்போகும் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்- நெருக்கடியில் தேர்வுக்குழு…!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் அடுத்து வரவிருக்கும் ஆசியக் கோப்பை, மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை தவறவிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆசிய கோப்பை 2022, T20I வடிவத்தில், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை UAE இல் நடைபெற உள்ளது, அதே நேரத்தில் இந்திய அணி ஆகஸ்ட் 8 அன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஹர்ஷல் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட T20I க்கான இந்திய அணியில் ஒரு பகுதியாக உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில், அவர் முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடவில்லை மேலும் ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி புளோரிடாவில் நடக்கும் கடைசி இரண்டு போட்டிகளையும் அவர் தவறவிடுவார்.

அறிக்கையின்படி, காயத்திற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வு மற்றும் மறுவாழ்வு தேவைப்படுவதால், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் ஹர்ஷல் படேலின் பங்கேற்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உலகக் கோப்பை வாய்ப்புகள் அவர் குணமடைவதைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது, மேலும் அவர் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சேருவார் என கூறப்படுகிறது.

ஹர்ஷலின் இல்லாதது வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தீபக் சாஹருக்கு வாயப்பாக கூடும் என கருதப்படுவதோடு அர்ஷ்தீப் சிங் அணியில் இணைக்கப்படுவதற்கும் அதிக வாயப்புக்கள் உருவாகியுள்ளன.