ஆசிய கோப்பை மீண்டும் இலங்கையில்- துரித ஏற்பாடுகள் முன்னெடுப்பு…!

ஆசிய கோப்பை மீண்டும் இலங்கைக்கு?

ஆசியக் கிண்ணப் போட்டிகளை இலங்கையே பெரும்பாலும் நடத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி ஆசிய கிரிக்கட் பேரவையின் அதிகாரிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு ஆசிய கிரிக்கட் பேரவை ஏற்கனவே ஹோஸ்டிங் உரிமையை வழங்கியுள்ளதாகவும், ஆனால் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அதற்கான நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடி, இந்த நாட்டில் போட்டிகளை நடத்துவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

போட்டி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறும். போட்டியின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தற்போது பர்மிங்காமில் தங்கியுள்ள நிலையில், நாடு திரும்பியதும் ஆசிய கவுன்சில் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.