ஆச்சரியம் ஆனால் உண்மை -சஹீர் கான் சாதனையை சமப்படுத்தி விட்ட உமேஷ் யாதவ் ..!

ஆச்சரியம் ஆனால் உண்மை -சஹீர் கான் சாதனையை சமப்படுத்தி விட்ட உமேஷ் யாதவ் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் சஹீர் கானுடைய சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அகராதியில் 150 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில், 49வது போட்டியில் இந்த சாதனையை உமேஷ் யாதவ் படைத்தார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் தொடர்ந்து அணியில் விளையாடி வந்தார்.

ஆனால் அவ்வப்போது வாய்ப்பு கொடுக்கப்படுவதும் ,அணையிலிருந்து வெளியேற்றப்படுவதும் ஆனநிலையில் விளையாடிய உமேஷ் யாதவ் அதே 49 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் கபில்தேவ், ஜவகல் ஸ்ரீநாத், இஷாந்த் சர்மா, சஹீர் கான் , மொகமட் ஷமி ஆகியோரை தொடர்ந்து  இப்போது அந்தப் பட்டியலில் உமேஷ் யாதவ் இணைந்திருக்கிறார்.

ஆச்சரியம்தான், ஆனால் உண்மையானது.