ஆண்டின் சிறந்த ஐரோப்பிய வீரர் விருதை வென்ற கரீம் பென்சிமா…!

ஆண்டின் சிறந்த ஐரோப்பிய வீரர் விருதை வென்ற கரீம் பென்சிமா…!

ஐரோப்பிய கால்பந்து அட்டவணையில் மிகவும் தனித்துவம் வாய்ந்த போட்டியான இந்த ஆண்டு UEFA சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான ஆரம்ப சுற்று குழுவின்  பட்டியலை அறிவிப்பது (match Draw) மற்றும் ஆண்டின் சிறந்த ஐரோப்பிய வீரர் விழா நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டு ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக ரியல் மாட்ரிட் அணியின் தலைவரும் பிரான்ஸ் முன்கள வீரர் கரீம் பென்சிமா தேர்வு செய்யப்பட்டார்.

பென்சிமா கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றார். பென்சிமா 2021/22 சீசனில் 50 கோல்களையும் 16 உதவிகளையும் (Assist) பதிவு செய்தார்.

ஸ்பெயின் லா லிகா வெற்றி, 2021/22 சாம்பியன்ஸ் லீக் வெற்றி ஆகியவை ரியல் மாட்ரிட் வசமாவதில் பென்சிமாவின் பங்கு அளப்பரியது.

இதன் காரணமாக, பென்சிமாவை ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து வீரராக பெயரிடுவது கடினம் அல்ல. இப்போதும் பல வர்ணனையாளர்கள் பென்சிமாவுக்கும் இந்த ஆண்டு பலோன் டி’ஓர் விருது கிடைக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்சோலெட்டி இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து பயிற்சியாளர் விருதை வென்றார்.