ஆனந்தக் கண்ணீர் விட்ட பாபர் அசாமின் தந்தை ..! (வீடியோ இணைப்பு)

பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாச, பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேற்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் தங்கள் பரம எதிரிகளுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

வெற்றிக்காக 152 ரன்களை துரத்திய பாபர் (68) மற்றும் ரிஸ்வான் (79) ஆகியோர் ஓட்டமழை பொழிய துபாயில் 13 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய பந்துவீச்சைப் பிரித்தெடுத்த பாகிஸ்தான் வரலாறு படைத்தது்

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆரம்ப விக்கெட்களை பறித்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை இலகுபடுத்தினார்.

29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்து வரலாறு படைக்க அதனைப் பார்த்து ரசித்த பாபர் அசாமின் தந்தை ஆணந்த கண்ணீர் விட்டழுதார்.

வீடியோ இணைப்பு.