ஆப்கானிஸ்தான் தொடர்பில் மெண்டிஸின் கருத்து..!

உலகக் கோப்பையில் மோசமான தோல்விக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு தொடங்கிய இலங்கை மற்றும் ஜிம்பாப்வே இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியது.

ஆனால் அந்த போட்டியின் முடிவு சர்வதேச தரவரிசை பட்டியலை பாதிக்கவில்லை. இலங்கை அணி 7வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி அங்கிருந்த நிலையிலும் இருந்தது. ஆனால் இம்முறை இலங்கை அணி எதிர்கொள்ளும் சவாலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

நிறைவடைந்த உலகக் கோப்பையில் மூன்று முன்னாள் உலக சாம்பியன்களை (இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான்) வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி இலங்கை வந்திருக்கின்றது.

உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை 91 ரன்களுக்கு 7 விக்கெட் என்று கட்டுப்படுத்தி 22-வது ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்சை முஜிபுர் ரஹீம் காப்பாற்றியிருந்தால், ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையில் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

உண்மையில், இந்த ஆப்கானிஸ்தான் அணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய அணி அல்ல.

“ஆப்கானிஸ்தானை இனி அனுபவமற்ற அணியாகக் கருத முடியாது. அவர்கள் நிறைய லீக் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். நான் 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தபோதிலும், நான் இரண்டு லீக் franchise cricket மட்டுமே விளையாடியுள்ளேன். ஆனால் குர்பாஸ் போன்ற ஒரு வீரர், இவ்வளவு இளம் வயதில், பல லீக்குகளில் விளையாடியுள்ளார் என குசால் மெண்டிஸ் நிலைமையை புரிந்து கொண்டு கூறினார்.

“அவர்கள் உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராகவும் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் விளையாடியுள்ளனர் என்றும் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.