ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் கோலி தான்.. அடித்து சொன்ன டி வில்லியர்ஸ்!

ஸ்பின்னர் எங்கப்பா? ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் கோலி தான்.. அடித்து சொன்ன டி வில்லியர்ஸ்!

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியின் செயல்பாடுகள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. வில் ஜாக்ஸ் மற்றும் முகமது சிராஜ் இருவரையும் வாங்கவில்லை என்றாலும், சின்னச்சாமி மைதானத்தில் எப்படியான ஒரு பவுலிங் லைன்-அப்பை அமைக்க வேண்டுமோ, அப்படியோரு பவுலர்களை சரியாக வாங்கியுள்ளனர்.

ஏனென்றால் சின்னச்சாமி மைதானத்தில் ஃபுல்லர் லெந்தில் பந்துவீசும் பவுலர்களின் தேவை அதிகமாக இருந்தது. அதேபோல் பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் செய்யக் கூடிய பவுலர் கட்டாயம் தேவை. அந்த வகையில் ரூ.10.75 கோடி கொடுத்து புவனேஷ்வர் குமாரையும், ரூ.12.50 கோடி கொடுத்து ஹேசல்வுட்டையும் ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. ஏற்கனவே யாஷ் தயாளும் ஆர்சிபி அணியில் ரீடெய்ன் செய்யப்பட்டார்.

ஸ்பின்னர்களால் க்ருணால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா இருந்தாலும், ஆர்சிபி அணியின் பவுலிங் நன்றாக எடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்திய விக்கெட் கீப்பரையும் வாங்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து ஜித்தேஷ் சர்மாவை ஆர்சிபி அணி வாங்கியது சிறந்த செயல்பாடாமக் பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் ஆர்சிபி அணியின் கேப்டனாக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் என்று எந்த நட்சத்திர வீரரையோ அல்லது கேப்டனையோ ஆர்சிபி அணி நிர்வாகம் வாங்கவில்லை. இதனால் விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விராட் கோலியின் நண்பரும், ஆர்சிபி முன்னாள் வீரருமான டி வில்லியர்ஸ் பேசுகையில், ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து உறுதியாக எந்த தகவலும் இல்லை. ஆனால் அந்த இடத்திற்கு விராட் கோலி வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆர்சிபி அணியை மொத்தமாக பார்த்த பின், விராட் கோலி வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக உணர முடிகிறது.

ஆர்சிபி அணி மெகா ஏலத்தில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசல்வுட் இருவரையும் வாங்கி இருக்கிறது. அவர்கள் ரபாடாவையும் வாங்குவதற்கு முயற்சி செய்திருக்கலாம். இருந்தாலும் இங்கிடியையாவது வாங்கியுள்ளனர். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினையும் வாங்குவதற்கு வாய்ப்பு அமைந்தது. ஆனால் சிஎஸ்கே அணி பெரிய தொகை கொடுத்து வாங்கிவிட்டது.

ஆர்சிபி அணியின் பேலன்ஸ் நன்றாக உள்ளது. ஆனால் ஒரு மேட்ச் வின்னர் ஸ்பின்னர் மட்டும் மிஸ்ஸாகிரார். அதேபோல் இந்த அணியால் சின்னச்சாமி மைதானத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார். அஸ்வினை வாங்குவதற்கு சுமார் ரூ.4.20 கோடி வரை ஆர்சிபி அணி நிர்வாகம் ஏலத்தில் முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.