ஆஸி வீரர் ஆஷ்டன் அகர் இலங்கை வம்சாவளி என்பது குறித்து பெருமிதம் …!
இலங்கை அணிக்கெதிராக கான்பெராவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியாவுக்காக பேட்டிங்கைத் தொடங்கிய ஆஷ்டன் அகர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது சுவாரஸ்ய தகவலாகும்.
அவரது தந்தை அவுஸ்திரேலியர், தாய் இலங்கையர் சோனியா ஹெவாவிசா.
கண்டி தர்மராஜா கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடிய நள ஹேவாவிஸ்ஸவின் பேரன் ஆஷ்டன் அகர் என்பதும் முக்கியமானதாகும்.
1974 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த சோனியா, தனது மூத்த மகன் இலங்கை வம்சாவளியை நினைத்து பெருமைப்படுவதாக கூறுகிறார்.
மேற்கு ஆஸ்திரேலியா, 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் பேர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகியவற்றிற்காக விளையாடிய பிறகு, ஆஷ்டன் அகர் 2013 இல் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார்.
அவர் 2015 இல் தனது ODI அறிமுகமானார் மற்றும் அடுத்த ஆண்டில் தனது முதல் T20I ஐ விளையாடினார். 28 வயதான ஆஸ்டன் அகர் அவுஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒருநாள் போட்டிகளிலும் 41 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.