ஆஸ்திரேலியாவில் வீட்டை விட்டு வெளியேறும் டில்சான் …!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான 44 வயதான TM டில்ஷான், ஆஸ்திரேலியாவில் தன்னுடைய குடும்பத்தாரோடு வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் மெல்பேர்ன் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரஹன் எனும் இடத்தில் வசித்து வந்த டில்ஷான், தன்னுடைய அதிசொகுசு குடியிருப்பு தொகுதியை விற்று வேறு இடத்துக்கு மாற்றலாக தீர்மானித்திருக்கிறார்.

 மெல்பேர்ன் நகரின் கடற்கரை பகுதி சார்ந்து டில்ஷான் குடியிருக்க தயாராவதாக டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் டிஎம் டில்ஷான் தன்னுடைய குடும்பத்தாரோடு அவுஸ்திரேலியாவில் வாசித்தபதோடு அவரும் , அவரது மூத்த மகளும் கிரிக்கெட் களத்தில்  சாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் டில்ஷானின் மகள் ஆஸ்திரேலியாவின் இளையோர் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

Previous articleரியல் மேட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை நீடித்த பிரபல கால்பந்து வீரர் ..!
Next articleEuropa League கிண்ணம் பெனால்டி முறையில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி