இங்கிலாந்தின் டெஸ்ட் ஆரம்ப வீரர்- சங்காவின் புதிய ஆலோசனை..!

இங்கிலாந்தின் டெஸ்ட் ஆரம்ப வீரர்- சங்காவின் புதிய ஆலோசனை..!

டெஸ்ட் போட்டி வடிவங்களில் இங்கிலாந்து விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ருமான ஜோஸ் பட்லர் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஒளிபரப்பின் போது, ​​சங்கக்காரா பட்லரின் ஆட்டத்தை இந்தியாவின் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் போன்ற தொடக்க வீரர்களுடன் ஒப்பிட்டார்.

இந்த இரண்டு வீரர்களும் மிகவும் அதிரடி பேட்டர்கள், அவர்கள் விளையாட்டின் நீண்ட வடிவத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களின் பலவீனங்கள் என்று சொல்லப்படுவதையே பலமாக மாற்றிக்கொண்டார்கள்.

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸைத் தொடங்கும் தொடக்க வீர்ராக நான் பார்க்க விரும்புகிறேன், ஹெய்டன், இவர்கள் அனைவரும் இன்னிங்ஸைத் தொடங்குவதை நாங்கள் பார்த்திருக்கிறோம் – ஏன் பட்லரால் முடியாதா என கேள்வி தொடுத்துள்ளார்.

பட்லரும், குமார் சங்கக்காரவும் சமீபத்தில் 2022 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்து பணியாற்றினர். 2008 சாம்பியன்ஸ் ராஜஸ்தான் தொடரின் இறுதிப் போட்டியை எட்டியது, ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

பட்லரோடு ஒன்றாக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையிலேயே டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இங்கிலாந்திற்கு பட்லர் செயற்படவேண்டும் எனும் கருத்தை சங்ககார தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மெக்கல்லமின் வரவிற்குப் பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பாரம்பரிய கிரிக்கெட் மரபிலிருந்து விடுபட்டு நவீன கிரிக்கெட் மரபிற்குள் அதிரடி வேட்டையை கையிலெடுத்திருக்கும் நிலையில் பட்லரும் ஆரம்ப வீரராக களம் இறங்குவாராக இருந்தால் மிகப்பெரிய புதுமைகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்க்கலாம்.