இந்திய டெஸ்ட் அணியின் உதவி தலைவர் அஜிங்க்யா ரஹானே ஒரு காலத்தில் வெளிநாட்டு தொடர்களில் சிறந்த இந்திய வீரர்களில் ஒருவராக கருதப்பட்டார்.
கேப்டன் விராட் கோலிக்கு மேலாக அவர் மதிப்பிடப்பட்டார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ரஹானேவுக்கு அது பலனளிக்கவில்லை. அவர் ஓரிரு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை விளையாடியிருந்தாலும், ரஹானேவிடம் நாங்கள் எதிர்பார்க்கும் நிலைத்தன்மை இல்லை.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி மூன்று தொடர்களில் முறையே 22.75, 38.29 மற்றும் 18.67 என்பதே ரஹானேயின் சராசரி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்கூட, ரஹானே தன்னை நிரூபிக்கவில்லை, முதல் இன்னிங்ஸில் அவர் 49 ரன்கள் எடுத்தார், ஆனால் அது போதுமானதாக இல்லை.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டீப் தாஸ்குப்தா, ரஹானே ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே வீரர் அல்ல என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்காக அறிமுகமானதற்கு முன்பு ரஹானே 4000 ரன்களுக்கு மேல் அடித்ததாகவும், மும்பைக்கான 3-வது இடத்தில் பேட் செய்த நாட்களில் நம்பமுடியாத அளவிற்கு திறமையை வெளிப்படுத்தியிவர் என்றும் தாஸ்குப்தா கூறினார்.
இருப்பினும், அவர் இப்போது தனது நிலமையை இழந்துவிட்டதாக தெரிகிறது. ரஹானே தனது Footwork களில் உறுதியாக தெரியவில்லை என்று தாஸ்குப்தா கூறினார்.
அவர் மும்பைக்கு விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். காலையில் மும்பை வான்கடே ஆடுகளம் ஈரமாக இருந்தது, ஆடுகளத்தில் புல் இருந்தது, அந்த நாட்களில் அங்கே பேட்டிங் செய்வது ஒரு கனவுதான். ஆனால் ரஹானே இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பு 4000-4500 ரன்களுக்கு மேல் அடித்தார், முக்கியமாக 3 வது இடத்தில் பேட்டிங் செய்தார், ”என்று சனிக்கிழமை தனது யூடியூப் சேனலில் தாஸ்குப்தா கூறினார்.
“நீங்கள் இந்தியாவில் பேட் செய்யும்போது, உங்கள் திறமை மாறுகிறது. நீங்கள் வெளியே ஸ்விங் மற்றும் வேகத்தில் விளையாடுகிறீர்கள், 2015-16 ஆம் ஆண்டில் நீங்கள் சென்று ரஹானேவின் அடிச்சுவடுகளைச் (Footwork) சரிபார்த்தால், இப்போது அவரது அடிச்சுவடு அவ்வளவு திட்டவட்டமானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
இந்திய அணியில் ரஹானே தவிர, புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரின் நிலமையும் கவலைக்குரியது. மேலும், சுப்மான் கில் காயம் இந்தியாவை ஒரு சிக்கல் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
மாயங்க் அகர்வாலை ரோஹித் சர்மாவுடன் இறக்கலாம் என்று இந்திய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது, அதே நேரத்தில் கே.எல்.ராகுல் அல்லது ஹனுமா விஹாரி ஒருவர் நடுத்தர வரிசையில் விளையாடுவார்.
இதற்கிடையில், டெஸ்ட் அணியில் தனது இடத்தை காப்பாற்ற அஜிங்க்யா ரஹானேவுக்கு இங்கிலாந்து தொடர் இறுதி வாய்ப்பாக இருக்கலாம் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.