இங்கிலாந்தின் 3 வீரர்கள் ஐபிஎல் இல் இருந்து திடீர் விலகல்- புதிய சிக்கல் தோற்றம்..!
இங்கிலாந்து அணியின் முன்னணி நட்சத்திரங்களான பெயர்ஸ்டோ, டேவிட் மாஙன், மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் ஐபிஎல்லின் இரண்டாம் கட்ட போட்டிகளில் விளையாட முடியாது என அறிவித்துள்ளனர் .
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வதும் முக்கியமான போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இடம்பெற இருந்தபோது கொரோனா தாக்கம் காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
இந்த போட்டியை இரண்டு, மூன்று நாட்கள் கடந்து நடத்தலாம் என இங்கிலாந்து கிரிக்கட் சபை விருப்பம் கேட்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் சபை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதால் 5வது போட்டியில் தங்களுக்கு பின்னர் விளையாட முடியாது என உறுதிபட தெரிவித்தனர.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இங்கிலாந்தில் மூன்று வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பெயர்ஸ்டோ அதேபோன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கிறிஸ் வோக்ஸ் இது மாத்திரம் அல்லாமல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் டேவிட் மாலன் ஆகியோர் விலக்கி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மாலனுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போது தென்னாப்பிரிக்காவின் மார்க்ரமை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.