இங்கிலாந்துக்கான இலங்கையின் இளையோர் அணியில் தமிழ்பேசும் கனிஸ்ரன்…!
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த போட்டி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நடைபெறும். இலங்கை இளையோர் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 இளையோர் ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து இளையோர் லயன்ஸ் அணியுடன் மூன்று நாள் பயிற்சிப் போட்டி நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் 21-ம் தேதி இளையோர் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்கான 19 வயதுக்குட்பட்டோர் அணி ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இளையோர் அணியின் தலைமைத்துவம் நாலந்த கல்லூரி வீரர் ரவீந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 18 வீரர்களைக் கொண்ட இலங்கை இளையோர் அணியில் பாடசாலை கிரிக்கெட் களத்தில் சிறந்து விளங்கிய பல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை இளையோர் அணி விபரம் ?
ரவின் டி சில்வா (கேப்டன்), ஷெவோன் டேனியல், அபிஷேக் லியனாராச்சி, பவன் பதிராஜா, ரனுத சோமரத்ன, சதீஷ ராஜபக்ஷ, அஞ்சல பண்டார, லஹிரு தவத்தகே, வனுஜா சஹான், வினுஜா ரன்புல், அசித வன்னிநாயக்க, ஹசித அமரசிங்க, கனிஸ்டன் குணரத்னம், ரன்னித்னம், துவிஷது ரண்பத் மிஹிரா, துலாஜ் சமுத்ரிதா, ட்ரெவின் மேத்யூ