இங்கிலாந்துடனான தொடரை வென்று அசத்தியது இந்தியா..!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என இன்று (9) கைப்பற்றியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த சிறப்பான வெற்றியாகும்.

தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியால் 195 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஜோ ரூட் 84 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில், தனது 100வது டெஸ்டில் விளையாடிய ஆர்.அஷ்வின் 5 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஷுப்மான் கில் 110 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் ஷோயப் பஷீர்  5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இன்று தனது 700வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 218 பெற்றது.

ஆட்ட நாயகனாக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், போட்டி தொடரின் நாயகனாக 712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் விருது பெற்றனர்.