இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஒன்றுக்கு சொந்தக்காரரான இலங்கையின் திமுத் கருணாரத்ன…!
இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் கருணாரத்ன இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இன்று யோக்க்ஷைர் அணிக்காக அறிமுகமாகியிருக்கிறார்.
இலங்கையின் மிகச்சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்களுள் ஒருவரான திமுத் கருணாரத்ன இன்றைய அறிமுகத்தின் மூலமாக இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரு புதிய சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆனார்.
இது துடுப்பாட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை சாதனை அல்லாமல் அறிமுகத்தின் மூலமாக வந்த சாதனையாகும்.
1919 ஆம் ஆண்டு மிடில்செக்ஸிற்காக கலாநிதி சர்ச்சில் குணசேகரவிடமிருந்து ஆரம்பித்து, 100 வருடங்களுக்கும் மேலாக இலங்கையர்கள் இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் விளையாடுகின்றனர்,
ஆனால் யார்க்ஷயர் அணிக்காக ஒருபோதும் விளையாடவில்லை. இன்று திமுத் கருணாரத்ன அந்த அணிக்காக விளையாடிய முதல் இலங்கையர் ஆனார்.