இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட்டுக்கு பதிலாக வரப்போகும் 2 வீரர்கள் யார் தெரியுமா ?

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட்டுக்கு பதிலாக வரப்போகும் 2 வீரர்கள் யார் தெரியுமா ?

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் இன்று விலகினார். அலிஸ்டர் குக்கிற்குப் பிறகு ரூட் இங்கிலாந்து அணியின் தலைவராக நியமிக்கட்டவர்.

இருப்பினும், சமீப காலமாக அவரது கேப்டன்சி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆஷஸ் தொடரில் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாமல் தொடரை இழந்த நிலையில் விமர்சனத்தை அதிகம் எதிர்கொண்டார்,

அதனரபின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு மேலும் ஏமாற்றம் ஏற்பட்டது.

ரூட் தனது அணிக்கு 64 ஆட்டங்களில் தலைமை தாங்கி 27 வெற்றிகளைப் பெற்றார். இந்தநிலையில் இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட்டை மாற்றக்கூடிய இரண்டு வீரர்களைப் பார்ப்போம்.

1. பென் ஸ்டோக்ஸ்

ஜோ ரூட் விலகியவுடன் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து டெஸ்ட் அணி பாரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது , முதன்மையான ஆல்ரவுண்டராக இருப்பதால் ஜோ ரூட்டுக்குப் பிறகு விளையாடும் XI இல் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது பெயர். எனவே, ரூட் விலகிய நிலையில் அணித்தலைவராக ஸ்டோக்ஸ் அடுத்த சிறந்த தேர்வாகும்.

2) ஜானி பேர்ஸ்டோ

ஸ்டோக்ஸ் நியமிக்கப்படாவிட்டால், பேர்ஸ்டோவுக்கு  வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் இவர் கேப்டன்சி அனுபவத்தைப் பெருமளவில் கொள்ளவில்லை. ஆனால் ரூட் மற்றும் ஸ்டோக்ஸைத் தவிர உறுதியான அணி வீரர் அவர் மட்டுமே என்பதால் நிர்வாகம் அதைக் கருத்தில் கொள்ளுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இல்லையென்றால் பட்லரிடமும் தலைமைத்துவம் வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.