இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய A அணி..!

இந்தியா A vs இங்கிலாந்து லயன்ஸ்:

இங்கிலாந்து லயன்ஸ் அணி மூன்று நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இந்தியா A அணி முதல் டெஸ்ட் டிராவில் முடிந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதன்பின், அகமதாபாத்தில் நடைபெறும் மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷம்ஸ் முலானி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்ற இதன் காரணமாக 403 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி 268 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மூன்றாவது போட்டியில் 134 ஓட்டங்களால் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா-A 2-0 என கைப்பற்றியது. ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

403  எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 3-வது நாளில் 2 விக்கெட்டுக்கு 83  எடுத்திருந்தது. இதன்பின், நான்காவது மற்றும் கடைசி நாளில், இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவைப்பட்டன.

பின்னர் மும்பையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி தனது திறனை அபாரமாக காண்பித்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கடைசி நாளில் ஆடுகளத்தில் தங்க விடவில்லை. முலானி 20 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சரண்ஷ் ஜெயின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணியில் எட்டாவது இடத்தில் இருந்த ஒல்லி ராபின்சன் 105 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 80  குவித்தார். ஆனால் அவரால் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 72.4 ஓவர்களில் 268 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் இந்தியா-ஏ அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் சதம் அடித்தார்

முன்னதாக, இந்திய A அணி முதல் இன்னிங்சில் 192  மட்டுமே எடுத்தது. பதிலுக்கு இங்கிலாந்து லயன்ஸ் அணியும் முதல் இன்னிங்சில் 199 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியா-A அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில், தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் 240 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 117 எடுத்து சதம் விளாசினார். சரண்ஷ் ஜெயின் 63  எடுத்தார். இதனால் இந்தியா-ஏ அணி இரண்டாவது இன்னிங்சில் 409 எடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 403 ரன்கள் இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்றது.