இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியை துவம்சம் செய்த இலங்கை லெஜெண்ட்ஸ் அணி..!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் வீதிப் பாதுகாப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது போட்டி கான்பூரில் நேற்று நடைபெற்றது.

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார்.

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியின் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் அதிக நேரம் விக்கெட்டில் நிற்க இலங்கை பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை. துடுப்பாட்டத்தில் அதிக ரன்களை குவித்த கேப்டன் இயான் பெல் 15 ரன்களும், விக்கெட் கீப்பர் பில் மஸ்டார்ட் 14 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜெயசூர்ய தனது நான்கு ஓவர்களில் 2 maiden ஓவர்கள் வீசி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்தின் இன்னிங்ஸின் தொடக்க ஜோடியைத் தவிர, எந்த பேட்ஸ்மேன்களும் 10 ரன்களைத் தாண்ட அனுமதிக்கப்படவில்லை, மேலும் இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணி 19 ஓவர்களில் 78 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் நுவான் குலசேகர மற்றும் சதுரங்க சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜீவன் மெண்டிஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலகுவான இலக்கை துரத்த களம் இறங்கிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் உபுல் தரங்காவும், தில்ஷன் முனவீரவும் 2வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தனர்.

உபுல் தரங்க 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் டில்ஷான் முனவீர 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 14 ஓவர்களில் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற முடிந்தது.

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?