இந்தியாவின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் ? மஹேல ஜெயவர்த்தன..!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவரும் ரவி சாஸ்த்திரி உடைய பதவி காலம் T20 உலக கிண்ண தொடருடன் நிறைவுக்கு வருகிறது.
அவர் குறித்த பதவியில் தொடர வாய்பில்லை ஆதலால் புதிய பயிற்சியாளரை தேடும் பணிகளில் இந்திய கிரிக்கெட் சபை மறைமுகமாக ஈடுபட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என நம்பப்பட்டாலும்கூட இன்னும் சிலருடைய பெயர் அதிகமாக பேசப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவரும் IPL டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியினுடைய தற்போதைய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இது மாத்திரமல்லாமல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியினுடைய தற்போதைய பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்தன அதேபோன்று நியூசிலாந்தின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும் ஆர்சிபி பெங்களூர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான மைக் ஹெசன் ஆகியோருடைய பெயர் விபரங்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
அடுத்து இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் யார் எனும் விபரங்கள் இதுவரை எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ரவி சாஸ்த்திரி பதவி விலகும்வரை காத்திருக்க வேண்டும்.