இந்தியாவை தோற்கடிக்க முன்னர் இதை மட்டும் செய்யுங்கள், ஆதர் விடுக்கும் கடுமையான கோரிக்கை..!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்து, T20 தொடர் இடம் பெறுகிறது.
இந்த T20 தொடரை பொறுத்தவரையில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வீரர்களுக்கு மிக முக்கியமான கோரிக்கையை பயிற்சியாளர் மிக்கி ஆதர் முன்வைத்துள்ளார்.
நீங்கள் அனைவரும் சமூக வலைத் தளங்களில் இருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் எனும் கோரிக்கையை அவரிடம் இருந்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற எதிர்மறையான கருத்துக்கள் இலங்கை அணியை பற்றியு,ம் இலங்கை வீரர்களை பற்றியும் பரப்பப்படுகின்றன.
இவற்றை பார்ப்பதும், படிப்பதையும் நிறுத்துவதன் மூலம் நீங்கள் Positive கிரிக்கெட் விளையாட முடியும் எனும் கருத்து அவரிடம் இருந்து வந்திருக்கிறது.
ஆகவே வீரர்கள் அனைவரும் தயவு செய்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.