இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் புதிய சாதனை..!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் புதிய சாதனை..!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஓர் புதிய இங்கிலாந்து சாதனை படைத்துள்ளார், இங்கிலாந்துக்காக அனைத்துவகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை பெற்றவர் எனும் சாதனையை இன்று நிலைநாட்டினார்.

இதுவரை அலிஸ்டையார் குக் வசம் இருந்த சாதனையை இன்று ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

15739 ஜோ ரூட் (366 இன்னிங்ஸ்)*
15737 அலிஸ்டயார் குக் (387)
13779 கெவின் பீட்டர்சன் (340)
13331 இயன் பெல் (370)
13190 கிரகாம் கூச் (337)