இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி எப்போது? தேதி, நேரம்.. குரூப் 1-இல் உள்ள மற்ற அணிகள்.. முழு விவரம்

இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி எப்போது? தேதி, நேரம்.. குரூப் 1-இல் உள்ள மற்ற அணிகள்.. முழு விவரம்

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. சூப்பர் 8 இல் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் இந்திய அணி முதல் பிரிவில் இடம் பெற்று உள்ளது. தனது முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது இந்திய அணி.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 20 அன்று நடைபெற உள்ளது. பார்படோஸ் நாட்டில் உள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும்.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாகவே டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது நடந்த உலகக் கோப்பை குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதிலும் வலுவான அணியாக கருதப்படும் நியூசிலாந்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர வைத்தது. எனவே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்திய அணி இடம் பெற்றுள்ள சூப்பர் 8 குரூப் ஒன்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கடினமான அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த குரூப்பில் மூன்றாவதாக வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணி இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுமே வலுவான அணிகள்தான். அந்த இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா மிக மிக கவனமாக விளையாட வேண்டும். வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இந்த குரூப்பில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்று உலகக் கோப்பை அரை இறுதிக்கு முன்னேற முடியும்.

இந்திய அணியில் விராட் கோலியின் ஃபார்ம் மட்டுமே கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அவர் குரூப் சுற்றில் மொத்தமே 5 ரன்கள் தான் எடுத்தார். சூப்பர் 8 சுற்றில் கோலி தனது ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.