இந்திய மற்றும் தென் ஆபிரிக்க மகளிர் அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி தொடரொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஒருநாள் போட்டிகளும் 3 T20 போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், போட்டி இடம்பெறும் திகதிகள் மற்றும் மைதானம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 மகளிர் உலக இருபதுக்கு இருப்பது தொடருக்கு பின்னர் இந்திய மகளிர் அணி எதுவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.