இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவர் உபாதை- முதலாவது டெஸ்டில் இருந்து நீக்கம் ..!

இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவர் உபாதை- முதலாவது டெஸ்டில் இருந்து நீக்கம் ..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் பயிற்சியின் போது தலையில் பந்து அடிபட்டு உபாதைக்குள்ளானதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

சிராஜ் வீசிய பந்தை எதிர்கொண்டபோது  இவருடைய தலையின் பின்புறத்தில் பந்து பலமாக அடிபட்டதாக இந்திய கிரிக்கட் சபை தெரிவிக்கின்றது.

இதனால் எதிர்வரும் நான்காம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் விளையாடமாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஷுப்மான் கில் உபாதையடைந்து தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், ரோகித் சர்மாவுடன் அகர்வால் ஆரம்ப வீரராக விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அகர்வாலுக்கும் உபாதை ஏற்பட்டுள்ளதால் ரோகித் சர்மாவுடன் லோகேஸ் ராாகுல் ஆரம்ப வீரராக விளையாடும் நிலை உருவாகியுள்ளது.