தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் பட்டேலை இந்திய தேர்வுக் குழு பெயரிட்டுள்ளது.
ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
அக்சர் படேல் முன்னதாக அணியில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார், ஜடேஜாவுக்கு ஏற்பட்ட உபாதையால் அக்சர் பட்டேல் அணியில் இணையவுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் , ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்
எமது YouTube தளத்துக்கு செல்ல ?