இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே இந்த 2 வீரர்கள்தான்.. உண்மையை உடைத்த விமர்சகர்கள்

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே இந்த 2 வீரர்கள்தான்.. உண்மையை உடைத்த விமர்சகர்கள்

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பும்ரா தான் முக்கிய காரணம் என அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஆனால், பும்ராவுக்கு முன்னதாக இரண்டு வீரர்கள் செய்த பேட்டிங் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என சில விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட் 42 ரன்கள், அக்சர் பட்டேல் 20 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து வந்தனர். இந்த நிலையில் இந்திய அணி 100 ரன்களையாவது தாண்டுமா? என்ற சந்தேகம் இருந்தது. அப்போது அர்ஷ்தீப் சிங் சிறப்பாக ஆடி ஓரளவு ரன் சேர்த்தார். அவர் 9 ரன்கள் சேர்த்தார். கடைசியாக வந்த முகமது சிராஜ் 7 ரன்கள் சேர்த்தார்.

இவர்கள் இருவரும் எடுத்த 16 ரன்கள் மிக முக்கியமானதாக விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்திய அணி 19 ஓவரில் 119 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. ஒருவேளை இவர்கள் எடுத்த 16 ரன்களை கழித்து விட்டு பார்த்தால் இந்திய அணியின் ஸ்கோர் 103 ஆக மட்டுமே இருந்திருக்கும்.

இந்தப் போட்டியில் 140 ரன்கள் என்பது சரியான ஸ்கோராக இருக்கும் என்ற நிலையில் இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 120 ரன்கள் என்ற இலக்கு சிறியது என்றாலும் ஜஸ்பிரீத் பும்ரா சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அவர் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஒருவேளை இந்திய அணி 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தால் பும்ராவால் கூட இந்திய அணியை காப்பாற்றி இருக்க முடியாது. இதை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் பின்வரிசையில் சேர்த்த 16 ரன்களும் வெற்றியில் முக்கிய பங்காற்றியது என பாராட்டினர்.