இந்திய அணியில் நிலவும் சர்ச்சை குறித்து கொந்தளித்த கபில்தேவ் ..!

இந்திய அணியில் நிலவும் சர்ச்சை குறித்து கொந்தளித்த கபில்தேவ் ..!
இந்திய அணியின் கேப்டன்சி சர்ச்சை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னாள் தலைவர் கபில் தேவ் கடும் கோபமடைந்துள்ளார்.
விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது தொடங்கிய சர்ச்சை இன்று வரை தொடராகவே நீடித்து வருகிறது.
இந்த சூழலில் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி திடீரென விலகுவதாக தேனை ஆபிரிக்க தொடரின் நிறைவுக்கு பின்னர் அறிவித்தார்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் இருந்தால் நல்லது என BCCI கருதியது. ஆனால் கோஹ்லி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன்சியில் இருந்தும் விலகியதால், விராட்டிற்கும் – பிசிசிஐ-க்கும் இடையே நடக்கும் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது என தெளிவாக தெரியவந்தது.
இந்நிலையில் முன்னாள் தலைவர் கபில் தேவ் இந்த சர்ச்சை தொடர்பில் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், முதலில் விராட் கோலி செல்போன் அழைப்பை ஏற்று, பிசிசிஐ-யிடம் மாநாட்டு பேச வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை சரிசெய்யுங்கள். தனிப்பட்ட கோபங்களை விட நாடும், தேசத்திற்கான அணியும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் .
நான் கேப்டனாக பதவியேற்ற போது, தேவையான அனைத்து விஷயங்களும் செய்துக்கொடுக்கப்பட்டது. ஆனால் எப்போதுமே அதே போன்று இருக்காது. அதற்காக கேப்டன்சியை விட்டு விலக வேண்டுமென்று அர்த்தமல்ல. விராட் கோலியின் நிலையும் அதே தான். என்னைப் பொறுத்தவரையில் விராட் இனி சிறந்த பேட்ஸ்மேனாக ரன்களை குவிக்க வேண்டும் என கபில்தேவ் பேசியுள்ளார்.
ஆகவே இங்கிருக்கும் சிக்கல்களை தீர்த்து அணியாக வேற்றினோக்கி பயணப்பட வேண்டும் எனவும் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.