இந்திய அணி கேப்டன் அமான் அபார சதம்.. 13 வயது சிறுவன் அதிரடி.. 339 ரன்கள் குவிப்பு
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ஜப்பான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஆயுஷ் மாத்ரே மற்றும் 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி ஆகியோர் அபாரமாக விளையாடினர்.
குறிப்பாக 13 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்றொரு வீரரான ஆயுஸ் மாத்ரே 29 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும். இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆண்டிரே சித்தார்த் 48 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
நடுவரிசையில் களமிறங்கிய கேப்டன் முகமது ஆமன், அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 118 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். கேப்டன் ஆமானுக்கு உறுதுணையாக கார்த்திகேயா 57 ரன்கள் எடுக்க இறுதியில் ஹரிதிக் ராஜ் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டர் என 12 பந்தில் 25 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்ததுடன் இந்தப் போட்டியில் அபார வெற்றியையும் இந்தியா தனதாக்கியது.