இந்திய, இலங்கை கிரிக்கெட் தொடர்- இலங்கை கிரிக்கெட் சபைக்கு  கோடிக்கணக்கான வருவாய்..!

இந்திய, இலங்கை கிரிக்கெட் தொடர்- இலங்கை கிரிக்கெட் சபைக்கு  கோடிக்கணக்கான வருவாய..!

 இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் அண்மையில் கொரோனாவையும்  கடந்து வெற்றிகரமாக நிறைவுக்குவந்தது.

இந்த தொடருக்கு இந்தியாவின் இரண்டாம் தர அணியை இந்திய கிரிக்கெட் சபை அனுப்பி இருக்கிறது என்று அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட சிலர் விசமத்தனமான கருத்துக்களை முன்வைத்தாலும்கூட, இந்த தொடர் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

மிக முக்கியமானக தொலைக்காட்சி உரிமம், விளம்பரங்கள் உள்ளிட்ட பலவகையான நடவடிக்கைகள் மூலமாக ஏராளமான கோடிகள் வருவாயாக இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்திருப்பதாக அதன் செயலாளர் மொஹான்் டீீ சில்வா கருத்து தெரிவித்தார்.

14.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று அவர்கள் கணக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

289 கோடி இலங்கை ரூபாய்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த தொடர் மூலமாக வருவாய் ஈட்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தவான் தலைமையிலான இந்திய அணி, தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமகளிர் ஹொக்கி போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு- பெல்ஜியம் முதலிடம் இந்தியா முன்னேற்றம்..!
Next articleவிளையாட்டு மைதானங்களை பனரமைக்க புதிய வேலைத்திட்டம் – அமைச்சரவை அனுமதி..!