இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு கிரேக் சேப்பலா இந்த கம்பீர்.. காத்திருக்கும் அபாயம்! இதை கவனிங்க!

இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு கிரேக் சேப்பலா இந்த கம்பீர்.. காத்திருக்கும் அபாயம்! இதை கவனிங்க!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல பயிற்சியாளர்கள் வந்திருக்கிறார்கள், பல பயிற்சியாளர்கள் சென்றிருக்கிறார்கள். இதில் பல பேர் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். சிலர் பல சர்ச்சைகளையும் படைத்திருக்கிறார்கள்.

அப்படி இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சாபக்கேடு என்றால் அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் தான். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை தோற்றதற்கு கிரேக் சேப்பல் செய்த கிறுக்குத்தனமான செயல்தான் காரணம் என்று இன்னும் விமர்சனங்கள் இருக்கின்றது.

உதாரணத்திற்கு ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரை நடுவரிசைக்கு கொண்டு சென்றது என உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களுக்கு முன் அவர். இப்படி பல மாற்றங்களை செய்தார் இது அத்தனையும் பெயிலியர் ஆக மாற இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

அது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக விளங்கிய கங்குலியை கேப்டன் பதவிக்கு லாயக்கு இல்லை என்று கடிதம் எழுதி அவரை பதவியில் இருந்து தூக்கியது என்று பல சேட்டைகளை சேப்பல் செய்தார். இதேபோன்று இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வரவேண்டிய இர்பான் பதானை டெஸ்டில் 40 ஓவர் வீச வைத்தது மற்றும் தொடக்க வீரராக களம் இறக்கியது என்ற வேலைப்பாடுகளை எல்லாம் கிரேக் சேப்பல் செய்தார்.

அவர் பயிற்சியாளராக இருந்தது இந்திய கிரிக்கெட்டுக்கு இருண்ட காலம் என்று கங்குலி பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த நிலையில் கிட்டத்தட்ட கிரேக் சேப்பில் போல குணாதிசயங்களை உடைய கம்பீர் பயிற்சியாளராக வந்திருப்பது சில கிரிக்கெட் விமர்சகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது.இந்திய அணியில் முன்பு போல் இப்போது எந்த அரசியலும் கிடையாது.

சீனியர், ஜூனியர், இவர்தான் சிறந்தவர், அவர் தான் சிறந்தவர் என்ற பாகுபாடு கிடையாது. மேலும் வீரர்கள் குரூப் ஆக பிரிந்து இருப்பதும் கிடையாது. ஆனால் கம்பீரின் வருகைக்குப் பிறகு இதெல்லாம் மீண்டும் வந்துவிடும் என்ற அபாயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கம்பீர் நான் சொல்வது தான் சட்டம் என்று செயல்பட வேண்டும் என கூறுவார்.

அது விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு கொஞ்சம் கூட ஒத்து வராது. மேலும் பிளேயிங் லெவனில் வீரர்களை மாற்றுவது, பவுலர்களை மாற்றுவது, சீனியர் வீரர்களை ஒதுக்குவது போன்ற செயல்களில் எல்லாம் கம்பீர் ஈடுபட அதிக வாய்ப்பு இருக்கிறது. கம்பீர் இவ்வாறு செய்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சருக்களை கொடுக்கும். பிரச்சனையை தீர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை புதிய பிரச்சினைகளை கம்பீர் உருவாக்கி விடக்கூடாது என்பதுதான் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.