இந்திய கிரிக்கெட்டுக்கு விரைவில் 3 அணிகள்? கம்பீர், அகார்கர் சொன்னதை கவனிச்சீங்களா?

இந்திய கிரிக்கெட்டுக்கு விரைவில் 3 அணிகள்? கம்பீர், அகார்கர் சொன்னதை கவனிச்சீங்களா?

உலக கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணி மிகப்பெரிய பலம் வாய்ந்த ஒரு அணியாக விளங்குகிறது. பொருளாதாரத்தில் மட்டும் அல்லாமல் மனித வளத்திலும் இந்திய கிரிக்கெட்டை யாராலும் தொட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.மற்ற நாடுகள் எல்லாம் வீரர்களை தேர்வு செய்யவே திக்கு முக்காடுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் பாக்கியத்தால் இந்திய அணியில் ஒரு இடத்திற்கு மூன்று நான்கு பேர் போட்டி போடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு தொடக்க வீரர் என்ற ஒரு இடத்தை எடுத்துக் கொண்டால் ரோகித் சர்மா, கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ், இசான் கிஷன், அபிஷேக் ஷர்மா, கேஎல் ராகுல் போன்ற பல வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போகிறது. இதனால் டெஸ்ட்க்கு ஒரு அணி, t20க்கு ஒரு அணி, ஒரு நாள் போட்டிக்கு என ஒரு அணி என்ற மூன்று அணியை கொண்டு வரப் போவதாக கம்பீர் பயிற்சியாளராக ஆவதற்கு முன்பு அறிவித்தார். எனினும் பயிற்சியாளர் ஆன பிறகு தன்னுடைய இந்த பேச்சிலிருந்து பின்வாங்க தொடங்கினார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட்டில் மூன்று அணியை தேர்வு செய்யும் முறை எப்போது வரும் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கம்பீர் நிச்சயமாக எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் தற்போது அணி ஒரு மாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. விராட் கோலியின் ரோகித் சர்மாவும் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

ஆனால் ஒரே அடியாக மூன்று அணியை தேர்வு செய்ய இயலாது என்று கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய தேர்வு குழு தலைவர் அகார்கர், தற்போது மூன்று அணிகள் தேர்வு செய்வது குறித்து நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை. ஒரு இடத்திற்கு சரியான வீரர்களை சரியான காம்பினேஷனில் தேர்வு செய்ய வேண்டும்.

மூன்று கிரிக்கெட் வடிவங்களுக்கும் இந்த ஃபார்முலாவை வைத்து தான் நாங்கள் வீரர்களை தேர்வு செய்கின்றோம் என்று கூறினார். இதனால் கில், பும்ரா போன்ற வீரர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவார்கள். இவர்கள் தவிர மூன்று கிரிக்கெட் வடிவங்களுக்கும் மூன்று அணியை உருவாக்கும் முயற்சி விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.