இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகுவாரா ராகுல் டிராவிட்- விண்ணப்பங்களை கோரும் பிசிசிஐ ..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகுவாரா ராகுல் டிராவிட்- விண்ணப்பங்களை கோரும் பிசிசிஐ ..!

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வரமாட்டாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் சபையிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தற்போதைய தேசிய கிரிக்கெட் அக்கடமியின் (NCA) தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

குறித்த பதவிக்கு தேவையான தகுதிகள் குறைந்தபட்சம் 25 டெஸ்ட்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவம் மற்றும் சர்வதேச அளவில் அல்லது இந்தியா A, இந்தியா Under -19, இந்தியா பெண்கள் அல்லது ஐபிஎல் ஆகியவற்றில் குறைந்தது ஐந்து வருடங்கள் பயிற்சியளித்த அனுபவத்துடன் விண்ணப்பதாரர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆகும்.

இதுவரை NCA தலைவர் பதவியை டிராவிட் வகித்து வரும் நிலையில், இவ்வாறு புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை கேள்வியை தோற்றுவித்துள்ளது.

மீண்டும் அந்தப் பதவியில் டிராவிட் தொடர விரும்பினால், அவரும் சேர்த்து அந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் பிசிசிஐ தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

Bcci

எதுவானாலும் இந்திய தேசிய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளன சாஸ்திரி குழுவினரின் ஒப்பந்த காலம் வருகின்ற T20 உலக கிண்ணத்துடன் முடிவுக்கு வருகிறது.

ஆகவே அந்த பதவியில் டிராவிட்டை நியமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இது அமையெலாம் எனவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

Previous articleபார்சிலோனா அரங்கில் இருந்து உடனடியாக கிழித்து அகற்றப்படும் மெஸ்ஸியின் சுவரொட்டிகள்- ஏற்க மறுக்கும் ரசிகர்கள்..!
Next articleதனிமைப்படுத்தப்பட்ட CSK யின் முக்கிய வீர்ர்கள்..!