இந்திய கிரிக்கெட் அணி ஏன் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் ஆண்டுதோறும் விளையாடுவதில்லை தெரியுமா?
கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதமாகவே பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஆண்டுதோறும் தொடர்ந்து ஏதேனும் ஒரு தொடர்களில் விளையாடிக் கொண்டே இருக்கும். ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் குறைந்தபட்சம் 10 அல்லது 15 நாட்கள் இடைவெளி கிடைப்பதை பெரிதாக உள்ளது.
இந்த நிலையில் ஏன் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
டி20 உலக கோப்பை முடிந்த உடனேயே ஜிம்பாப்வே தொடர் அதன்பிறகு இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் என வரிசையாக இந்திய அணி விளையாடிய நிலையில் தற்போது அடுத்த சர்வதேச போட்டியை செப்டம்பர் 19ஆம் தேதி தான் விளையாட இருக்கிறது
இதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது. ஏன் ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வில்லை என்று கேட்டால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் மூலம் பிசிசிஐ பெரிய லாபத்தை பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அணிகளை வைத்து சாம்பியன்ஸ் லீக் என்ற தொடரை கடந்த காலங்களில் பிசிசிஐ நடத்தியது.
இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரை செப்டம்பர் மாதம் நடத்துவதற்காக தான் அந்த காலகட்டத்தில் சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடாமல் இந்தியா இருந்து வந்தது. ஆனால் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெறுவதில்லை. இதற்கு மாற்றாக மினி ஐபிஎல் என்ற ஒரு தொடரை நடத்த பிசிசிஐ யை ஆயத்தம் ஆகி வந்தது. இதற்கான நடவடிக்கையை பிசிசிஐ நீண்ட காலமாக எடுத்து வருகிறதும்
ஆனால் இந்த தொடரை எப்படி நடத்துவது, எந்த அணிகள் பங்கேற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. சுமார் இரண்டு அல்லது மூன்று வாரம் நடைபெறும் அளவுக்கு இந்த தொடரை தயார் செய்து ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என பிசிசிஐ யோசித்து வருகிறது. எதற்காக தான் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பிசிசிஐ எந்த ஒரு போட்டியையும் நடத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டு இருக்கிறது. இதனால் இனிவரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் மினி ஐபிஎல் என்ற ஒரு தொடரில் விளையாடக் கூடும்.